4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

பத்து வருட இடைவெளிக்கு பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் நானே வருவேன்.. இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை இந்துஜா நடிக்கிறார் என்கிற தகவல் மட்டும் தான் இதுவரை வெளியாகி இருந்தது.
இந்தநிலையில் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக சுவீடன் நடிகை எல்லி அவுர் ரம் என்பவர் நடிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. நானே வருவேன் பட போஸ்டரை இவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டதன் மூலம் கிட்டத்தட்ட அது உறுதியும் ஆகியுள்ளது.
இந்த எல்லி அவுர் ரம் தமிழுக்கு ஒன்றும் புதியவர் அல்ல.. ஏற்கனவே இந்தியில் வெற்றிபெற்ற குயின் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் தமிழில் பாரீஸ் பாரீஸ் என்கிற பெயரில் ரீமேக் செய்தபோது, அதில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்தவர் தான் இவர்.. ஆனால் அந்தப்படம் சில காரணங்களால் இதுவரை வெளியாகததால், அனேகமாக நானே வருவேன் படம் தான் தமிழில் வெளியாகும் இவரது முதல் படமாக இருக்கும் என்று சொல்லலாம்.




