பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாராவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார் சமந்தா. இதுதவிர தெலுங்கில் தயாராகி வரும் யசோதா என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார் . இந்தப் படத்திற்காக ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற பிரமாண்டமான செட் ஒன்று ஐதராபாத்தில் போடப்பட்டுள்ளது. அதோடு மூன்று மாதங்கள் இடைவிடாத படப்பிடிப்பு இந்த செட்டில் நடைபெறுவதால் அங்கிருந்து தங்குவதற்காக வெளியில் சென்று வந்தால் அதிகப்படியான காலதாமதம் என்பதால் அந்த பைவ் ஸ்டார் ஹோட்டல் செட்டுக்குள்ளேயே தற்போது தங்கி வருகிறார் சமந்தா. அதோடு பைவ் ஸ்டார் ஹோட்டல் போன்றே இந்த செட் உருவாகியிருப்பதால் ஓட்டலில் தங்கி இருப்பது போன்ற அதே உணர்வு ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார் யசோதா பட நாயகி சமந்தா. இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, மணிசர்மா இசை அமைக்கிறார். ஹரி சங்கர்- ஹரிஷ் ஆகியோர் இயக்கி வருகிறார்கள்.