டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'மாமன்னன்' படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வடிவேலு நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்தது. மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட வடிவேலுவை மாரி செல்வராஜ் மாலையிட்டு வரவேற்றுள்ளார் . இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.