சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் இதுவரை 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது துபாயில் நடந்து வரும் பிரபலமான 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜா இசை கச்சேரி நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த இசை கச்சேரி நேற்றிரவு (மார்ச் 5) கோலகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. துபாய் எக்ஸ்போ ஷோவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்துடன் இசை கச்சேரி நடைபெற்றது. கொரோனா 2வது அலைக்கு பிறகு மக்கள் பெருமளவு கூடி நிகழ்ச்சியை ரசித்தனர். இதேபோன்ற நிகழ்ச்சி சென்னையிலும் நடத்த வேண்டும் என இளையராஜா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.




