மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பரவலாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கும் திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில் பூஜாஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நம்பர் 1, நம்பர் 2 என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது படங்களில் வெற்றியை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். அதன் காரணமாக நான் ஒருபோதும் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்று திட்டமிடுவது இல்லை. நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்கள் ரசிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே கவனமாக இருக்கிறேன். அதோடு சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக உள்ளது.
தெலுங்கில் நான் நடனமாடிய புட்டபொம்மா பாடலின் நடனத்தை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசித்தார்கள். அதன் காரணமாக ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை கவரக்கூடிய நடன அசைவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆடியுள்ள நடனத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.