டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து சிலர் சாதித்து உள்ளனர். அவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம், யோகிபாபு மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள். அவர்கள் மூவருமே விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் என்பது முக்கியமானது. அவர்களது வரிசையில் 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் இடம் பிடிப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்த பின்னும் இன்னும் பாராட்டுக்களைப் பெறாமல் இருக்கிறார் புகழ். சந்தானம் நடித்து வெளிவந்த 'சபாபதி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கடுத்து 'என்ன சொல்லப் போகிறாய்' படத்திலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களிலும் அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை.
அடுத்து கடந்த வாரம் வெளிவந்த அஜித் நடித்த 'வலிமை' படத்திலும் ஒரே ஒரு காட்சியில் நடித்தார். அதுவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அடுத்த வாரம் வெளியாக உள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்திலாவது பேசப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “நான் எதிலும் தோற்றுப்போவதில்லை! ஒன்று வெற்றி கொள்கின்றேன், இல்லை கற்று கொள்கின்றேன்,” என தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.