சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா இருக்கிறார். ஒரு படத்திற்கு அவரது சம்பளம் 5 கோடி என்கிறது கோலிவுட் வட்டாரம். சில வருடங்களுக்கு முன்பே 3 கோடி சம்பளத்தைத் தொட்ட நயன்தாரா கடந்த சில படங்களாக 5 கோடி வரை வாங்கி வருகிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் சில நடிகைகள் இருந்தாலும் அவர்களது அதிகபட்ச சம்பளம் ஒரு படத்திற்கு 2 கோடி வரைதான் இருந்தது. இப்போது நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சென்னையிலிருந்து ஐதராபாத்திற்குச் சென்று தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா பிடித்துள்ளார்.
தற்போது 'சாகுந்தலம் (தெலுங்கு), காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் சமந்தா. அடுத்ததாக முதன்மைக் கதாநாயகியாக அவர் நடிக்க இருக்கும் 'யசோதா' படத்திற்கு சம்பளம் 3 கோடியாம்.
'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ஒன்றரை கோடி சம்பளம் வாங்கினார் சமந்தா. அதைக் கேட்டவுடன் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துவிட்டதால்தான் புதிய படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்கிறார்கள்.




