டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' |
சமந்தா கதையின் நாயகியாக நடித்த யசோதா படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து வருகிறார். என்றாலும் இந்த அரிய வகை நோயின் பிடியில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை.
இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுக்க உள்ளதாகவும், இதற்காக கேரளா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வந்த நிலையில் இப்போது தென் கொரியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இருந்து சிகிச்சை எடுக்கப் போகிறாராம் சமந்தா.