''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநடி' என தெலுங்கில் இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குனர் நாக் அஷ்வின். அடுத்ததாக 'பிராஜக்ட் கே' என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குனராக நாக் அஷ்வின், பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான மகிந்திராவின் சேர்மன் ஆனந்த் மகிந்திராவிடம் ஒரு உதவி கேட்டிருக்கிறார்.
அதில், “அன்புள்ள ஆனந்த் மகிந்திரா சார்… மிஸ்டர் பச்சன், பிரபாஸ், தீபிகா நடிக்கும் இந்தியன் சயின்ஸ் பிக்சன் படமான 'பிராஜக்ட் கே' என்ற படத்தை உருவாக்கி வருகிறோம். இன்றைய தொழில்நுட்பங்களுக்கு அப்பால் தனித்துவமான சில வாகனங்களை இந்த உலகத்திற்காக உருவாக்கி வருகிறோம். நினைத்ததைச் செய்தால் இந்தப் படம் நமது தேசத்தின் ஒரு பெருமையாக இருக்கும். நாம் திறமை வாய்ந்த இந்தியர்கள் கொண்ட டிசைனர்கள், எஞ்சினியர்கள் வைத்திருக்கிறோம் என உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறோம். ஆனால், எங்களது திட்டத்தின் அளவு, நாம் ஒரு கையைப் பயன்படுத்தக் கூடியது. இது போன்ற ஒரு படம் இதுவரை முயற்சி செய்யப்படவில்லை. எதிர்காலத்தை வடிவமைக்க உங்களது உதவி இருந்தால் பெருமை கொள்வோம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஆனந்த் மகிந்திரா, “எதிர்காலத்தின் இயக்கத்தை கற்பனை செய்த உங்களுக்கு உதவும் வாய்ப்பை நாங்கள் எப்படி மறுக்க முடியும். எங்களது உலக தயாரிப்பு மேம்பாட்டுத் தலைவர் வேலு மகிந்திரா, நிச்சயம் இதற்கு உதவுவார். அவரது வலிமை உங்களுக்குப் பின்னால் உறுதியாக இருக்கும். எதிர்காலத்தில் ஏற்கெனவே அவரது பாதங்கள் உள்ளன,” என்று உதவுவதற்கு உறுதி அளித்துள்ளார்.