என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

இந்தியத் திரையுலகத்தில் தென்னிந்தியப் படங்கள் மீதான பார்வையை முற்றிலுமாக மாற்றி வசூல் ரீதியாக பெரிய சாதனையைப் படைத்த படங்கள் 'பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் ராஜமவுலி, பிரபாஸ் ஆகிய இருவருக்கும் இந்திய அளவில் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பிரபாஸ் நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் 'ராதே ஷ்யாம்'. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படத்திற்காக கடந்த சில தினங்களாக மும்பையில் பல்வேறு பிரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது 'பாகுபலி 3' வருவதற்கான வாய்ப்புகள் ஏதும் இருக்கிறதா என்ற கேள்வி பிரபாஸிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு, “நானும் ராஜமவுலியும் நல்ல நண்பர்கள். அடிக்கடி எங்களது படங்களைப் பற்றி விவாதிப்போம். நிச்சயம் ஏதாவது ஒன்று நடக்கும். நானும் ராஜமவுலியும் 'பாகுபலி'யை விட்டு விலகவில்லை. யாருக்கு தெரியும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று பதிலளித்துள்ளார் பிரபாஸ்.
அவரது பதில் மூலம் எதிர்காலத்தில் 'பாகுபலி 3' வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது. தற்போது பல பிரம்மாண்ட சரித்திரப் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதால், அவற்றை மிஞ்சும் அளவிற்குத்தான் மூன்றாம் பாகத்தை எடுக்க நினைப்பார் ராஜமவுலி.