பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
வினோத் இயக்கத்தில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வலிமை' படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம். இரு வேறு விதமான விமர்சனங்கள் படத்திற்கு வெளிவந்தன. அஜித் ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அதே சமயம், விமர்சகர்கள் சுமாரான படம் என்றும், அஜித்தின் எதிர் தரப்பினர் மிகச் சுமாரான படம் என்றும் விமர்சித்தார்கள்.
இருப்பினும் படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூலித்ததாக செய்திகள் வெளிவந்தன. பல ஏரியாக்களில் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தங்கள் மகிழ்ச்சியை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளனர். 2022ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் தனியொரு படமாக வெளிவந்த இப்படத்திற்கு இரண்டாவது வாரத்திலும் பெரிய போட்டி எதுவுமில்லை. நேற்று 'ஹே சினாமிகா' படம் மட்டுமே வெளிவந்துள்ளது. அடுத்த வாரம் மார்ச் 10ம் தேதிதான் 'எதற்கும் துணிந்தவன், ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் வெளிவருகின்றன. அதற்குள் இந்தப் படம் முடிந்தவரையிலும் வசூலித்துவிடும் என்கிறார்கள்.