ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாறன்'. இப்படம் அடுத்த வாரம் மார்ச் 11ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் டிரைலர் யு டியுபில் வெளியிடப்பட்டது. அதற்கடுத்து தொடர்ந்து பல்வேறு விதமான பிரமோஷன்களை தயாரிப்பு நிறுவனமும், ஓடிடி நிறுவனமும் சமூக வலைத்தளங்களில் நடத்தி வருகின்றன.
ஆனால், படத்தின் நாயகனான தனுஷ் அவற்றிலிருந்து விலகியே இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுடனான பிரிவு குறித்த அறிக்கைதான் அவரது கடைசி பதிவாக உள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் பதிவிட்டதுதான் அதில் கடைசி பதிவு.
'மாறன்' படம் ஓடிடியில் வெளியாவதால் விலகி இருக்கிறாரா, அல்லது தனிப்பட்ட காரணங்களால் விலகி இருக்கிறாரா என்பது குறித்து திரையுலகினரும், தனுஷ் ரசிகர்களும் குழம்பி இருக்கிறார்கள். தனுஷ் நடித்த கடைசியாக வெளிவந்த தமிழ்ப் படமான 'ஜகமே தந்திரம்', ஹிந்திப் படமான 'அத்ராங்கி ரே', இரண்டுமே ஓடிடி வெளியீடுகள்தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. என்ன இருந்தாலும் 'மாறன்' படத்தின் நாயகனான அவர் பட வெளியீடு குறித்து எந்த ஒரு பதிவும் போடாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.