மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு | 'கூலி' படப்பிடிப்பு நிறைவு | கவுரி கிஷன் நடித்த வெப் சீரிஸிற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு | ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார் .
இந்நிலையில் விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மாபெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமைகளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் 110 கோடிக்கு மேல் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது .வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது .