Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயகாந்தா இது? - அதிர்ச்சி கொடுக்கும் புகைப்படம்

28 பிப், 2022 - 18:52 IST
எழுத்தின் அளவு:
Vijayakanth-shocking-photo

தமிழ் சினிமாவில் 1980 - 90களில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர்தான் விஜயகாந்த். இவர் நடித்து வந்த காலகட்டத்தில் ரஜினியும், கமலும் முன்னணி நடிகராக திகழ்ந்தார்கள். ஆனபோதிலும் விஜயகாந்துக்கு என்றும் ஒரு ரசிகர் வட்டம் இருந்து வந்தது. அதோடு ரஜினி-கமல் படங்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு அவரது படங்களும் வசூல் சாதனை புரிந்து வந்தன.

விஜயகாந்தை பொருத்தவரை குடும்ப பின்னணி மற்றும் போலீஸ் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் அவர்களுக்கு எதிரான ஒரு அதிரடி அரசியலை செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் ஒரு கேரக்டரில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது விஜயகாந்தின் சமீபத்திய புகைப் படமொன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் கம்பீரமாக இருந்த விஜயகாந்த், உடல்நலக்குறைவால் உடல் இளைத்து முகமே மாறி அடையாளம் தெரியாத தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்களும், தேமுதிக தொண்டர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பேரு வச்சாலும் - 100 மில்லியனைக் கடந்த முதல் ரீமிக்ஸ் பாடல்பேரு வச்சாலும் - 100 மில்லியனைக் கடந்த ... யானை மே 6ஆம் தேதி வெளியாகிறது யானை மே 6ஆம் தேதி வெளியாகிறது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

சீனி - Bangalore,இந்தியா
04 மார், 2022 - 17:20 Report Abuse
சீனி பாவம் இவரு, பிரேமலதா ஒரு பெரிய மாஸ்க் போட்டு இவரை மறைச்சிருக்கலாம். விடுதலையாக்கிடுங்க, இருக்குற வரையாவது சந்தோசமா இருக்கட்டும் கம்பீரகாந்த்.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
04 மார், 2022 - 10:23 Report Abuse
Matt P இளவயது கருணாநிதி மாதிரி தோற்றம் இருக்கிறது.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
03 மார், 2022 - 08:36 Report Abuse
M.Sam இது அவர் இல்லை அவரை போன்ற வேறு யாரோ அவரின் காது இதனை நீளம் கிடையாது
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01 மார், 2022 - 17:30 Report Abuse
J.V. Iyer நம்பமுடியவில்லை. பார்க்க கஷ்டமாக உள்ளது.
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
28 பிப், 2022 - 20:15 Report Abuse
Natchimuthu Chithiraisamy எதிர் கட்சி தலைவர் கலைஞரின் கடைசி காலத்தில்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in