'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
'ரீமிக்ஸ்' பாடல்கள் பற்றி ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இதற்கு முன்பு வெளியாகிய திரைப்படப் பாடல்களை இந்தக் காலத்திற்கேற்றபடி இசையில் சிற்சில மாற்றங்கள் செய்து வெளியிடுவதுதான் ரீமிக்ஸ். இந்த விதத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்கள், சுமாரான பாடல்கள் சில பல வருடங்களுக்குப் பிறகு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், அந்தப் பாடல்களுக்குக் கிடைக்காத ஒரு வரவேற்பும், பிரபலமும் 'டிக்கிலோனா' படத்தில் இடம் பெற்ற 'பேரு வச்சாலும்' பாடலுக்குக் கிடைத்துள்ளது. யு டியூபில் வெளியான இந்த வீடியோ பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு தமிழில் வெளிவந்த எந்த ஒரு ரீமிக்ஸ் பாடலும் யு டியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்த முதல் சாதனையை இந்தப் பாடல் நிகழ்த்தியுள்ளது.
தனது அப்பா இளையராஜா இசையமைத்து 1990ம் ஆண்டு கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்து வெளிவந்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம் பெற்ற ஒரு சிச்சுவேஷன் பாடல் 'பேரு வச்சாலும் வைக்காம போகாது மல்லி வாசம்'. அந்தப் பாடலை 'டிக்கிலோனா' படத்திற்காக ஒரு திருமணக் கொண்டாட்டப் பாடலாக இசையில் சில மாற்றங்களைச் செய்திருந்தார் யுவன். இப்பாடலுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற் கிடைத்தது. பாடலுக்கு நடனமாடிய சந்தானம், அனகா ஆகியோரும் கூட இந்தப் பாடலின் வரவேற்புக்கு ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.