அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' |
ஒருபக்கம் தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தான் விரும்பிய இடங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் சுற்றுலா என தனது நேரத்தை சரியாக பிரித்து வைத்திருக்கிறார் நடிகை சமந்தா. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது திருமண முறிவு குறித்த அறிவித்த சமந்தா, அதிலிருந்து ரிலாக்ஸ் செய்ய அடிக்கடி டூர் கிளம்பி விடுகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் கேரளா, கோவா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்த சமந்தா, கடந்த ஜனவரியில் சுவிட்சர்லாந்து ட்ரிப் சென்றுவந்தார். அதன்பிறகு சாகுந்தலம், யசோதா, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் மீதமிருந்த தனது பணிகளை முடித்து கொடுக்க ஆரம்பித்தார். இப்போது மீண்டும் அவர் தனது தோழி மேக்னா வினோத்துடன் மீண்டும் கேரளாவுக்கு சுற்றுலா கிளம்பிவிட்டார்.
இரண்டு தினங்களுக்கு முன் சாலக்குடியில் உள்ள அதிரம்பள்ளி அருவியின் அருகே ஒரு பாறையின் மீது நின்றுகொண்டே யோகா செய்வது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் சமந்தா. இப்போது ஆழப்புழா அருகில் உள்ள மராரிகுளம் கடற்கரையில் தனது தோழியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா, எல்லாமே மில்லியனில் லைக்ஸ அள்ளி வருகின்றன.