'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் பிப்., 19ல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜ., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று(பிப்., 22)எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4வது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், வாலாஜாபேட்டையில் 3வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ், குமாரபாளையத்தில் போட்டியிட்ட வேல்முருகன், தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 14வது வார்டில் போட்டியிட்ட வேல்மயில், பொன்னேரி 16வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கொடிக்குளம் 5வது வார்டில் போட்டியிட்ட ராஜசேகரன் ஆகிய விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஓரிரு வார்டுகளில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.