இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சினிமாவில் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடிக்கும் நடிகர், நடிகைகளைப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் காலம் காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த கிசுகிசக்களே அவர்களைக் காதலர்களாக்கி, கல்யாணமும் செய்து கொள்ள வைத்துவிடும். அவர்களில் ஒரு சிலர் பின்னர் பிரிந்து போன வரலாறும் உண்டு.
தெலுங்குத் திரையுலகத்தில் தற்போதைய காதல் கிசுகிசு ஜோடியாக இருப்பவர்கள் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரகொண்டா, 'புஷ்பா' புகழ் ராஷ்மிகா மந்தனா. தமிழில் விஜய் தேவரகொண்டா 'நோட்டா' படத்திலும், ராஷ்மிகா மந்தனா 'சுல்தான்' படத்திலும் நடித்தவர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் நடித்த 'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' படங்களில் மிகப் பொருத்தமான ஜோடியாக ரசிகர்களுக்குத் தெரிந்தார்கள். இருவரது குடும்பமும் நெருக்கமானவர்கள் என்றும் டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஷ்மிகாவுக்கு ஏற்கெனவே கன்னட நடிகர் ரக்ஷித் உடன் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தது. ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே பிரிந்துவிட்டனர். அதன்பிறகு சமீப காலமாக விஜய், ராஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
நேற்று முதல் பல பாலிவுட் மீடியாக்களில் இவர்களது காதலைப் பற்றிய செய்திதான் அதிகம் இடம் பெற்றுள்ளது. இருவரும் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகளை எழுதியிருக்கிறார்கள்.
விஜய் தற்போது பான்--இந்தியா படமான 'லிகர்' படத்திலும், ராஷ்மிகா ஹிந்தியில் நேரடியாக 'மிஷன் மஞ்சு, குட்பை' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்கள். இருவரது காதல் செய்தியில் எந்த அளவுக்கு உண்மை என்பது விரைவில் தெரிய வரும்.