30 மில்லியன் பாலோயர்களைக் கடந்த சமந்தா | பொங்கலுக்கு வெளியாகும் ‛அரண்மனை 4' | ஹிட்லர் ஆக மாறிய விஜய் ஆண்டனி | சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார் | விஜய் தேவரகொண்டா 13வது படத்தின் புதிய அப்டேட் | பொங்கல் ரேஸில் இருந்து விலகவில்லை - ரவி தேஜா படக்குழு உறுதி | பாடல் காட்சியுடன் தொடங்கும் விஜய் 68 படப்பிடிப்பு | பிறந்தநாளில் கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது | பகவந்த் கேசரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஸ்கந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் இதோ |
விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்த படம் எப்ஐ.ஆர். அவருடன் ரெபா மோனிகா ஜான், ரைய்சா வில்சன், மஞ்சிமா மோகன் நடித்திருந்தார்கள். படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு விஷ்ணு விஷால் பேசியதாவது: இந்த படத்தை நான் துணிந்து தயாரித்தேன். ஏற்கனவே இப்படத்தை ஒரு தயாரிப்பாளர் மறுத்து விட்டபோது, மீண்டும் இப்படத்தை நிறுத்தினால் ஒரு டைரக்டருக்கு என்ன நடக்குமென எனக்கு தெரியும். அதனால் நான் இதை தயாரித்தே தீருவது என முடிவு செய்தேன்.
என் படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள் ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு கூட மூன்று பேரையும் என்னால் ஒன்றாக இணைக்க முடியவில்லை, அது ஒரு சின்ன கவலை. ஒரு தயாரிப்பாளரா இந்த விஷயத்தில் நான் தோற்று விட்டேன். எல்லோரும் நான் சரியாக செக் எழுதிக்கொடுத்தேன் என்றார்கள், ஆனால் அதன் பின்னால் உள்ள கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும், இந்தப்படம் ஒரு கட்டத்தில் பெரிய பட்ஜெட்டாக வந்து நின்ற நேரத்தில், கடுமையான சிக்கல் உண்டானது, அப்பா வந்து கடன் வாங்காதே என்று அவரது பென்சன் பணத்தை தந்து உதவினார் அவருக்கு நன்றி. என்றார்.