இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழ் சினிமாவில் 2008ல் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இயக்குனரும், நடிகருமான சசிகுமார். அப்படத்தைப் பார்த்து பல மொழி சினிமா பிரபலங்களும் பாராட்டினார்கள்.
பாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மிகப் பெரும் ரசிகரும் கூட. அப்படம் பற்றி பல சந்தர்ப்பங்களில் பெருமையாகப் பேசியுள்ளார். படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த போது, கடந்த 2018ம் வருடம் அவர் போட்ட பதிவு ஒன்றில் “கடந்த தசாப்தத்தின் எனது அபிமானத் திரைப்படம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “இப்போது நீங்கள் நடிகர், இன்னும் பல படங்களைக் கொடுங்கள்” என்று சசிகுமாருக்கு டேக் செய்திருந்தார். அவருக்கு பதிலளித்த சசிகுமார், “எனது அபிமான இயக்குனரின் பாராட்டுக்கள், விரைவில் எனது இயக்கத்தில் ஆரம்பிப்பேன் சார்,” என்றார்.
ஆனால், இரண்டாவதாக அவர் இயக்கிய 'ஈசன்' படத்திற்குப் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக நடிகராக மட்டுமே தொடர்கிறாரே தவிர, ஒரு படத்தைக் கூட மீண்டும் இயக்கவில்லை. இந்நிலையில் அனுராக் காஷ்யப்பை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் சசிகுமார். “அனுராக் காஷ்யப்பை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன், நான் மதிக்கும் ஒரு படைப்பாளி” என சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு அனுராக் கேட்டபடி விரைவில் தனது இயக்கத்தில் ஒரு படத்தை ஆரம்பிப்பாரா சசிகுமார் ?.