டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்த வலிமை வருகிற 24ம் தேதி வெளியாகிறது. இதன் புரமோசன் மற்றும் வெளியீட்டு பணிகளுக்காக தயாரிப்பாளர் போனி கபூர் சென்னையில் முகாமிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை லிஸி 80ஸ் நடிகைகளுக்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்தளித்தார். இந்த விருந்தில் நடிகைகள் ராதிகா, த்ரிஷா, குஷ்பு, ஷோபனா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் இந்திரஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறப்பு அழைப்பாளராக போனி கபூர் கலந்து கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ராதிகா கூறியிருப்பதாவது: ஏகப்பட்ட இனிமையான அனுபவங்கள், நல்ல நட்புகள், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அருமையான விஷயங்கள் அங்கே இருந்தது. நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். என்று குறிப்பிட்டிருக்கிறார்.




