நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். சில விளம்பர படங்களில் நடித்துள்ள தோனி, தற்போது தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன், தோனியை சந்தித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், ‛என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்.... இவருடன் நான் இருக்கும் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது.
வாழ்க்கை மிகவும் அழகானது என்பதை நான் உணர்ந்த தருணம் அது. இப்படியான ஒரு தருணத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக, இந்த காலத்துக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் அவரை இன்று சந்திக்கையில், ஒரு நல்ல கதையுடன் சந்தித்தேன். விரைவில் அவருக்கு ஆக்ஷன் சொல்லி அவரை இயக்கும் நாள் வரும்!' என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதன்மூலம், தோனி சினிமாவில் நடிக்க உள்ளார் என்பதுபோன்ற தகவல்கள் பரவி வருகின்றன.