ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் "என் வீட்டுல நான் இருந்தேனே, எதிர் வீட்டுல அவ இருந்தாளே" என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் லலிதானந்த். இவர், அதே நேரம் அதே இடம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி தமிழ் சினிமா உலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர்.
மேலும் இவர் கோகுல் இயக்கத்தில் ரௌத்திரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், கார்த்தி நடிப்பில் காஸ்மோரா, விஜய்சேதுபதி நடித்த ஜூங்கா, சேரனின் இயக்கத்தில் திருமணம், அன்பிற்கினியாள் போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் இவரது பாடல் வரிகளில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் உட்பட இன்னும் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. லெமூரியாவில் இருந்த காதலி வீடு, ஒரு எலுமிச்சையின் வரலாறு, என்ற இரு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் லலிதானந்த் உடல்நலக்குறைவால் இன்று (பிப்.,20) மதியம் 3:35 மணியளவில் காலமானார்.