ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம், தமிழில் அறிமுகமான, மேக்னா ராஜ், தற்போது, தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில், அம்மணி ஏற்கனவே பிசி. இந்நிலையில், கன்னட திரையுலகிலும், கால் பதித்துள்ளார். தமிழில் வெளியாகி, வெற்றி பெற்ற, "சுந்தர பாண்டியன் படம், கன்னடத்தில், "ராஜு ஹுலி என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. இதில், தமிழில், லட்சுமி மேனன் நடித்துள்ள கேரக்டரில், மேக்னா ராஜ் நடிக்கிறார். "சுந்தர பாண்டியன் படத்தை, ஏற்கனவே பார்த்து, ரசித்திருக்கிறேன். அதில், ஹீரோயினுக்கு, பவர்புல்லான கேரக்டர். கிராமத்து பெண் கேரக்டரான இதில், நடிப்பு திறனை வெளிப்படுத்தும், காட்சிகள் அதிகம் உள்ளன. இதனால், இந்த வாய்ப்பு வந்ததுமே, ஒரு நொடி கூட, யோசிக்காமல், உடனடியாக ஓ.கே., கூறி விட்டேன் என்கிறாராம், மேக்னா ராஜ்.