மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா |
வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், படத்தின் டிரைலர் வந்த பிறகு பின்னணி இசையை அவர் அமைக்கவில்லை என ஒரு சர்ச்சை எழுந்தது.
யுவனின் சில பின்னணி இசை அமைப்புகள், இயக்குனர் வினோத்துக்குப் பிடிக்கவில்லை என்றும், அதனால் படத்தின் பின்னணி இசையிலிருந்து யுவன் விலகிவிட்டார் என்றும் தகவல் வெளியானது. அவருக்குப் பதிலாக ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார் என்றும் சொன்னார்கள்.
ஆனால், இன்று படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் போனிகபூர் அவரது சமூகவலைதள பதிவில் யுவன்ஷங்கர் ராஜாவின் பெயரைத்தான் 'டேக்' செய்துள்ளார். ஜிப்ரான் பெயரை 'டேக்' செய்யவில்லை.
இதனால் படத்திற்கு யுவன் தான் பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார் என்று தெரிய வருகிறது. ஒரு வேளை யுவன் பின்னணி இசை இல்லை என்ற தகவல் வெளியானால் அது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற தயக்கத்தில் சொல்லாமலும் இருக்கலாம்.