2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
தமிழ் திரையுலகில் 80, 90 களில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள் மூலம் அறிமுகமான அவர் தனது எதார்த்த நடிப்பினால் சிறந்த நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் அவ்வப்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் தோன்றி வந்தார். அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த ரேகாவுக்கு மீண்டும் திரை வெளிச்சம் கிடைத்தது. தொடர்ந்து போட்டோஷூட்களை பதிவிட்டு வந்த ரேகா, சமீபத்தில்ல் தனது ஒரே மகளை பார்க்கமுடியவில்லை என வருத்தமாக போஸ்ட் போட்டிருந்தார்.
இதனையடுத்து ரேகா மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ரேகாவின் முகஜாடையில் அழகாக இருக்கும் அவரது மகளின் புகைப்படத்தை பார்த்து பலரும் ஹார்டின்களை அள்ளிவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் ரேகாவின் மகள் நடிக்க வருகிறாரா? என ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால், வெளிநாட்டில் தங்கி படித்து, அங்கேயே வேலையும் பார்த்து வரும் ரேகாவின் மகளுக்கு நடிப்பதற்கு விருப்பமில்லை என தெரிய வருகிறது. இதையறிந்த நெட்டிசன்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல ஹீரோயின் மிஸ்ஸிங் என பீல் செய்து வருகின்றனர்.