தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடித்த வீரமே வாகை சூடும் படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிட இருந்த விஷால் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 4ம் தேதிக்கு மாற்றி இருக்கிறார். இது குறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் விஷால். அதனால் சூர்யா - விஷால் படங்கள் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அஜித்தின் வலிமை ரிலீஸ் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் , சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீசும் தள்ளி வைக்கப்பட்ட இருப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகி உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.