சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
விஜய் டிவியில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் -1 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்சினி. நள தமயந்தி, பவர் பாண்டி உட்பட பல படங்களில் நடித்திருக்கும் பிரியதர்ஷினி, தற்போது ஜோஸ்வா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் திவ்யதர்ஷினி அளித்துள்ள ஒரு பேட்டியில், தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்திற்கு ஏதேனும் நல்ல மெசேஜ்களை சொல்ல ஆசைப்படுவதாக கூறுகிறார். அதோடு தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் நான் நடித்த வேடத்தில் பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும்.
அதை உங்களைப் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான பிரபலத்தை வைத்து சொன்னால் பெரிய அளவில் மக்களைப் போய்ச் சேரும் என்று சொல்லியே நடிக்க வைத்தார் தனுஷ். அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் தான் நடித்தேன். அது என்னை பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. அதனால் அது போன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் டிடி.