ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியின் வெற்றியாளாராக தேர்வானவர் ராஜூ ஜெயமோகன். நட்புனா என்னனு தெரியுமா என்கிற படத்தில் நடித்துள்ள இவர், இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர். படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு இயக்குனராகவே விருப்பம் என பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பலமுறை கூறிவந்துள்ளார் ராஜூ.
அதேசமயம் பத்து வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவரிடம் இருந்து கைநழுவிப்போன விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.. இந்தப்படத்தில் முக்கியமான இடம்பெற்ற மணிமாறன் கதாபாத்திரத்தின் ஜூனியர் வெர்சனில் நடிப்பதற்காக ராஜூ முதலில் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் பின்னாளில் சீனியர் மணிமாறனாக நடிக்க இருந்த விகாஷின் முகச்சாயலுடன் ராஜூவின் உருவம் சரியக மேட்ச் ஆகவில்லை. குறிப்பாக ராஜூவின் கண்கள் அதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது. அதனால் ராஜூவை நீக்கிவிட்டு அந்த கதாபாத்திரத்தில் ரின்சன் சைமன் என்பவரை நடிக்க வைத்தனர். இந்த தகவல் ராஜூவின் சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.