சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையடுத்து கனெக்ட் மற்றும் காட்பாதர், கோல்ட், ஹிந்தியில் அட்லி இயக்கும் படம் என பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். மேலும், சாய் வாலா என்கிற டீ நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்து வரும் நயன்தாரா, கடந்த மாதத்தில் தனது தோழியுடன் இணைந்து டி லிப் பாம் கம்பெனி என்கிற அழகுசாதன பொருள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது துபாயில் ரூபாய் 100 கோடி முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் செய்ய நயன்தாரா முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான ஆலோசனை நடத்தவே கடந்த புத்தாண்டு தினத்தின் போதும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவர் துபாய் நாட்டுக்கு சென்றதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆக, சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர் என்று செயல்பட்டு வரும் நயன்தாரா தற்போது பல பிசினஸ்களிலும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்.