தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! |
காமெடி படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் சுந்தர்.சி பாகுபலி போல ஒரு வரலாற்று படத்தை இயக்கவேண்டும் என விரும்பியே 'சங்கமித்ரா'வை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக முடிவான இந்தப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதற்காக ஒப்பந்தமாகினர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமானார். அப்போது நடைபெற்ற கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்தப்படத்தை பற்றிய அறிவிப்பு, பர்ஸ்ட்லுக் ஆகியவை சிவப்பு கம்பள வரவேற்புடன் வெளியிடப்பட்டன.
ஆனால் சில காரணங்களால் இந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இந்தநிலையில் படத்தை தயாரிப்பதாக சொன்ன தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு எச்சரிக்கையும் விளக்கமும் கலந்த ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் சாராம்சம் இதுதான்.. அதாவது இந்தப்பட தயாரிப்பில் தாங்கள் தான் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி என கூறிக்கொண்டு ஒரு சிலர் அதற்கான பணம் திரட்டுகிறோம் என பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.. இது சட்டத்திற்கு புறம்பானது.. நாங்கள் அப்படி பணம் திரட்டவோ அல்லது திரட்டுவதற்காக எங்கள் பிரதிநிதிகள் என யாரையுமோ நியமிக்கவில்லை. அதனால் இப்படி கூறிக்கொண்டு வரும் நபர்களிடம் யாரும் இந்தப்படம் சம்பந்தமாக எந்தவித பணப்பரிமாற்றமும் செய்துகொள்ள வேண்டாம். இதுபோன்ற நபர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டாம். இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களால் ஏற்படும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என கூறியுள்ளனர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவத்தினர்.