அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

கடந்த சில வாரங்களுக்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியானது. செம்மரக்கடத்தல் பின்னணியில் சுகுமார் இயக்கிய இந்தப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க, பஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருந்தார். படக்குழுவினர் அதிரி புதிரி வெற்றியை எதிர்பார்த்தாலும் ஓரளவு டீசன்ட்டான வெற்றியை புஷ்பா பெற்றது.
இந்தநிலையில் இந்தப்படத்தையும் அல்லு அர்ஜுனின் நடிப்பையும் பாராட்டியுள்ளார் நடிகர் கார்த்தி. “அல்லு அர்ஜுன். புஷ்பாவாக உங்களுடைய நடிப்பை பார்த்து அசந்து போனேன். ..நம்மை சிறைபிடிக்கும் அப்படி ஒரு நடிப்பு.. சுகுமார் சார் இந்த கதையின் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் உயர்தரத்தில் நீங்கள் படமாக்கிய விதம் அருமை” என குறிப்பிட்டுள்ளார் கார்த்தி.
பதிலுக்கு “என்னுடைய நடிப்பு மட்டுமின்றி ஒவ்வொருவருவரின் உழைப்பால் உருவான புஷ்பாவுக்கு ஒட்டுமொத்தமாக நீங்கள் கொடுத்த பாராட்டுக்களுக்கு நன்றி” என கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.