எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் |
பஞ்சாப் மாநில சுற்று பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவலும் கருத்து தெரிவித்திருந்தார். "பிரதமரின் பாதுகாப்பில் தவறு இருந்தால் அந்த நாடு பாதுகாப்பானதாக இருக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
இதற்கு நடிகர் சித்தார்த் பதிலளிக்கையில், சாய்னாவின் பாலினம் குறித்து அவதூறான பதிவொன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய நிலையில் நடிகர் சித்தார்த், சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார்.
சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா, இது குறித்து கூறியிருப்பதாவது: சித்தார்த் முதலில் என்னைப் பற்றி ஏதோ கூறினார். பின்னர் மன்னிப்பு கோரினார். அவர் சொன்னது எதற்கு வைரலானது என்பது தெரியவில்லை. அன்று ட்ரெண்ட் ஆனதைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன்.
அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்து தாக்கக் கூடாது. சித்தார்த்துடன் நான் பேசியதில்லை. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக. என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.