பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை | தடைகளைத் தாண்டி தயாராகப் போகும் 'இந்தியன் 2' | 'வீட்ல விசேஷம்' வெற்றி : பரிசுகளை வழங்கிய ஆர்ஜே பாலாஜி | நடிகை மீனாவின் கணவர் காலமானார் | வெள்ளை ஆடையில் தேவதை போல… கீர்த்தி சுரேஷா இது? | சூர்யாவின் 'வாடி வாசல்' மேலும் தள்ளிப் போகும் ? | ஒரே மாதத்திற்குள் ஓடிடிக்கு வரும் 'சாம்ராட் பிரித்விராஜ்' | விஜய்யின் வாரிசு படம் குறித்து தமன் வெளியிட்ட அப்டேட் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடிகை சிவாங்கி, டாக்டர் பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்காக லண்டனில் முகாமிட்டு இசை அமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன். வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடிப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் செய்து வருகிறார் சந்தோஷ் நாராயணன்.
இந்த படத்தில் வடிவேலு இரண்டு பாடல்கள் பாடுகிறார். இதற்காக சமீபத்தில் வடிவேலுவும் இயக்குனர் சுராஜும் லண்டன் சென்றார்கள். திரும்பி வரும்போது கொரோனா தொற்றுடன் வந்தார்கள். தற்போது அதிலிருந்து மீண்டு படத்தின் பணிகளை தொடங்கி உள்ளார்கள். பிப்ரவரி மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்கி ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.