சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் |
இலங்கை தமிழரான முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர். இவரது வாழ்க்கையை 800 என்ற பெயரில் படமாக்க முயற்சிகள் நடந்தது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. விஜய்சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான போட்டோ ஷூட் நடத்தப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
முத்தையா முரளிதரன் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் குடும்ப நண்பர். தமிழர்களுக்கு எதிரானவர் அவரது வாழ்க்கை படத்தில் நடிக்க கூடாது என்று சில அமைப்புகள் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகிக் கொண்டார். படமும் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளனர். விஜய் சேதுபதிக்கு பதிலாக ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் அறிமுகமாகி இப்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தேவ் படேல் நடிக்கிறார் என்றும் அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரிபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்ற தெரிகிறது.