‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் முதல் பாகத்தைப் போல வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி வரலாற்று படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அபரிமிதமான வசூலும் கிடைத்து வருவதால் கடந்த 2018ல் தான் துவங்கிய வரலாற்று படமான சங்கமித்ராவை மீண்டும் துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் இயக்குனர் சுந்தர்.சி. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த படம் கிட்டத்தட்ட 450 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்ததாக அப்போது சொல்லப்பட்டது. பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் இதேபோன்று வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்து விட்டதால் சங்கமித்ரா படத்தில் இனி அவர் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் அவருக்கு பதிலாக அதே அளவு உயரம், ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட விஷாலை வைத்து இந்த படத்தை சுந்தர் சி மீண்டும் துவங்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன் என மூன்று படங்களில் சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விஷால். அதுமட்டுமல்ல இந்த படத்தை தயாரிப்பதாக அறிவித்திருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இன்னொரு மிகப்பெரிய நிறுவனமும் கைகோர்த்து இந்த படத்தை துவங்க இருக்கிறார்கள் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. காபி வித் காதல் படத்திற்கு பிறகு சுந்தர்.சி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அநேகமாக இந்த சங்கமித்ரா குறித்த அறிவிப்பே கூட அவரிடம் இருந்து விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.