மறைந்த பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் ராமநாராயணன். 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனத்தை இப்போது இவரது மகன் முரளி ராமசாமி நிர்வகித்து வருகிறார். விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் 103வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை வீரேஷ் என்பவர் இயக்குகிறார். இது ஒரு அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகிறது. திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை அமைக்க, சாண்டி நடனம் அமைக்கிறார். நடிகர்கள் தேர்வு நடக்கிறது. மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.