'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாக்கப்பட்டுள்ள மரைக்கார் ; அரபிக்கடளிண்டே சிம்ஹம் படம் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக தியேட்டர்களில் வெளியாவதற்காக காத்திருந்தது.. ஆனால் தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் அமேசான் பிரைமில் வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.
மரைக்கார் போன்ற பெரிய படம் இந்த சூழலில் தியேட்டர்களில் வெளியானால் தான் வழக்கம்போல ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி வர ஆரம்பிப்பார்கள்.. மற்ற படங்களும் தியேட்டர் ரிலீஸ் பக்கம் கவனத்தை செலுத்துவார்கள் என திரையரங்கு உரிமியாளர்கள் நம்பிக்கையாக காத்திருந்தனர். ஆனால் மரைக்கார் தயாரிப்பாளர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து கடுமையான ஆட்சேபம் எழுந்தது.
படத்தை ஒடிடியில் வெளியிடுவது தயாரிப்பாளரின் உரிமை என்றாலும், திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவராக ஆண்டனி பெரும்பாவூரே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது தான் இந்த எதிர்ப்புக்கு காரணம். இந்த சலசலப்பை தொடர்ந்து, தான் வகித்து வந்த துணைத்தலைவர் பதவியை ராஜினமா செய்துள்ளார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். இதன்மூலம் மரைக்கார் படம் ஒடிடியில் தான் ரிலீஸாக இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.




