ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, மற்ற மொழிகளில் வரவேற்பைப் பெற்ற படங்களின் தமிழ் ரீமேக் உரிமையையும் அவ்வப்போது கைப்பற்றி வருகிறார் கவுதம் மேனன். அந்த வகையில் கடந்த வருடம் மலையாளத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகியிருந்த நாயாட்டு என்கிற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருந்தார் கவுதம் மேனன்.
சமீபத்தில்கூட கன்னடத்தில் ஹிட்டான கருட கமன வ்ரிஷப வாகன என்கிற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் மீண்டும் இன்னொரு மலையாள ஹிட் படமான கப்பேலா படத்தின் ரீமேக் உரிமையை கவுதம் மேனன் கைப்பற்றியுள்ளார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இப்படி தொடர்ச்சியாக ரீமேக் உரிமைகளை வாங்கும் அவர் இந்தப் படங்களை தனது தயாரிப்பில் வேறு இயக்குனர்களை வைத்து தயாரிக்க இருக்கிறாரா அல்லது வேறு நிறுவனங்களுக்கு கைமாற்றி விடும் எண்ணத்தில் வாங்கிக் குவிக்கிறாரா என்பதுதான் தெரியவில்லை.