மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி |

1984ம் ஆண்டு வெளிவந்த வங்க மொழி படம் 'சத்ரு'. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பியது ஏவிஎம் நிறுவனம். ஆனால் பட தயாரிப்பாளர்கள் ரீமேக் உரிமத்துக்கு மிகப்பெரிய தொகை கேட்டனர். இதனால் ஏவிஎம் நிறுவனம் படத்தில் இருந்து இரண்டு காட்சிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ள உரிமம் பெற்றனர்.
அந்த இரண்டு காட்சிகளை வைத்து அதை சுற்றி புதிய திரைக்கதை அமைத்து உருவான படம் தான் 'சங்கர் குரு'. இதே படம் தெலுங்கில் 'சிண்ணாரி தேவதா' என்ற பெயரிலும் உருவானது. சங்கர் குருவை தமிழ் இயக்குனர் எல் ராஜாவும், தெலுங்கு படத்தை ராஜா நாயுடுவும் இயக்கினார்கள்.
தமிழில் அர்ஜுன், சீதா, ரஞ்சனி, பேபி ஷாலினி, சரத்பாபு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்திரபோஸ் தமிழுக்கும், கே சக்கரவர்த்தி தெலுங்குக்கும் இசை அமைத்தனர். இரண்டு மொழிகளிலும் படம் வெற்றி பெற்றது.