முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
அஜித் நடித்துள்ள வலிமை படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்துடன், ஹூயுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, புகழ், சுமித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வைரலானது. பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்த படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். என்றாலும் 15 காட்சிகளை திருத்தம் செய்ய கூறியிருக்கிறது. அதன் விபரம் வருமாறு:
1. படம் முடிந்த பின் வரும் டைட்டில் கார்டு ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும்.
2. விலங்குகள் சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கபடாத காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.
3. தங்கசங்கிலி பறிப்பு நிகழ்வின் போது சாலையில் ஆட்டோவில் இருந்து குழந்தையுடன் ரோட்டில் விழும் பெண்ணின் காட்சி நீக்கப்பட வேண்டும்.
4. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள் சில நீக்கப்பட வேண்டும், சில நீளம் குறைக்கப்பட வேண்டும்.
5. 'வக்காலி' எனும் வார்த்தையை மவுனிக்க வேண்டும்
6. சண்டை காட்சியில் கீழே விழும் நபரின் ரத்தம் தரையில் பரவும் காட்சியை நீக்க வேண்டும்.
7. ஒரு நபரை கத்தியால் குத்தும் காட்சி நீக்கப்பட வேண்டும்
8. கப்பலில் ஒரு நபரை கொல்லும் காட்சி நீக்கப்பட வேண்டும்.
9. "....த்தா"எனும் வார்த்தை வரும் காட்சிகளில் அந்த வார்த்தை நீக்கப்பட வேண்டும்.
10. நடுவிரலை காட்டும் காட்சி நீக்கப்பட வேண்டும்.
11. போலிசின் நெஞ்சில் கத்தியால் குத்தும் காட்சி நீக்கப்பட வேண்டும்.
12. கட்டுமான பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சியின் நீளம் குறைக்கப்பட வேண்டும்.
13. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகளில் டிஸ்க்லைமர் பெரிய எழுத்தில் போட வேண்டும்.
14. போதை பொருள் உட்கொள்ளும் காட்சியை நீக்க வேண்டும்.
15. கடவுள் தான் நிஜ சாத்தான் எனும் வார்த்தை நீக்கப்பட வேண்டும்.