பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் | மஹாராஜா 2ம் பாகத்திற்கு தயாராகும் விஜய்சேதுபதி | ஆரி அர்ஜுனனின் 'போர்த் புளோர்' | பிளாஷ்பேக் : படப்பிடிப்பு தவறாக நடந்ததால் பாட்டை மாற்றிய இளையராஜா | பிளாஷ்பேக் : எம்ஜிஆருக்கு பதில் நடித்த சிவாஜி |

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் கால் பதித்து பான் இந்தியா நடிகையாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஜோமோண்டே சுவிசேஷங்கள் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது மீண்டும் மலையாளத்தில் புலிமட என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். புலிமட என்றால் புலி வசிக்கும் இடம் என அர்த்தம்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தில் குணச்சித்திர நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இன்னொரு கதாநாயகியாக ஜெய்பீம் புகழ் லிஜோமொழ ஜோஸ் நடிக்கிறார். மம்முட்டி, நயன்தாரா நடித்த புதிய நியமம் என்கிற திரில்லர் படத்தை இயக்கிய ஏ.கே.சாஜன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.




