Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திலீப் குமார் டூ ஏ.ஆர்.ரஹ்மான் - ஆஸ்கர் நாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷல்

06 ஜன, 2022 - 15:37 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-AR-Rahman

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று(ஜன., 6) தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சென்னையில் 1966ம் ஆண்டு ஜன., 6ம் தேதி பிறந்த இவர் ஆஸ்கர் மூலம் இந்தியாவின் பெருமையை உலகளவில் அறிய செய்தார். அவரைப் பற்றிய பிளாஷ்பேக்...

ஆஸ்கர் நாயகன் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஏஆர்.ரஹ்மான், தனது 9வது வயதிலேயே தந்தையை இழந்தார். இவரது தந்தை பிரபல மலையாளத் திரைப்பட இசை அமைப்பாளர் ஆர்.கே.சேகர். தனது 11 ஆவது வயதில் கீ போர்டு வாசிப்பதற்காக இளையராஜாவின் இசைக்குழுவில் இணைந்தார் ஏ ஆர் ரஹ்மான். மேலும் ரமேஷ் நாயுடு, எம் எஸ் விஸ்வநாதன் போன்ற இசை அமைப்பாளர்களிடமும் கீ போர்டு வாசிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார் ஏ ஆர் ரஹ்மான்.

ரூட்ஸ், நெமிசிஸ், மேஜிக் என ராக் குழுக்களிலும் பணியாற்றி உள்ளார். சின்னத்திரை வேகமாக வளர்ந்து வந்த 80களில் வெவ்வேறு பொருட்களுக்கான 30 நொடி விளம்பரங்கள் வரத்துவங்கிய காலங்களில் இவர் விளம்பர இசை அமைப்பில் வெகு பிஸியாகவே இருந்தார் என்றால் அது மிகை அல்ல. ஆல்வின் கடிகாரம், லியோ காபி, பூஸ்ட, ஏசியன் பெயிண்ட்ஸ், பிரீமியர் குக்கர் என இவர் இசை அமைப்பில் வராத விளம்பரங்களே இல்லை எனும் அளவிற்கு சொல்லலாம்.


ட்ரினிடி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில் கிளாஸிகல் இசைத்துறையில் இசை பயின்று பட்டம் பெற்றவர் ஏ ஆர் ரஹ்மான். ஒருமுறை இவருடைய
சகோதரி நோயினால் அவதியுற்றபோது ஒரு இஸ்லாமிய நண்பரின் அறிவுரையின்படி மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி குணமாக அன்றிலிருந்து இவரது குடும்பம் இஸ்லாம் மதத்திற்கு மாறியது.

ஏ.எஸ்.திலீப் குமார் என்ற இவரது இயற்பெயர் அன்றிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் என அழைக்கப்பட்டார். "பகல் நிலவு", "இதயகோயில்", "நாயகன்", அக்னி நட்சத்திரம், "அஞ்சலி", "தளபதி" என்று தொடர்ந்து இளையராஜாவின் இசை அமைப்பில் வெற்றிப் படங்களை தந்த இயக்குநர் மணிரத்னம், 1992 ஆம் ஆண்டு இயக்குநர் கே பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்கிய "ரோஜா" என்ற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசை
அமைப்பாளராக அறிமுகம் செய்தார். படத்தின் பாடல்களான "சின்ன சின்ன ஆசை", "காதல் ரோஜாவே" புது வெள்ளை மழை என்று அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஏ ஆர் ரஹ்மானை கொண்டு சேர்த்ததோடு மட்டுமல்லாமல் முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருதினையும் பெற்று தந்தது. அதன்பின் அவர் இசையமைத்த பல பாடல்கள் ஹிட்டாகி இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பிரபலமானார். ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று உலகமே திரும்பி பார்க்க வைத்தார்.


ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட "வந்தே மாதரம்" ஆல்பம் இவரை புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது. ஜன கன மன, "மா துஜே சலாம்" போன்ற ஆல்பங்களும் இவருடைய இசைப்பணிக்கு பெருமை சேர்த்தன.

விருதுகள்
1992 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான "தேசிய விருது" "ரோஜா" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான "தேசிய விருது" "மின்சாரக்கனவு" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான "தேசிய விருது" "லகான்" ஹிந்தி திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான "தேசிய விருது" "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான "தேசிய விருது" "காற்று வெளியிடை" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான "தேசிய விருது" "மாம்" ஹிந்தி திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான "பத்மஸ்ரீ" வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான "பத்ம பூஷன்" வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு "ஸ்லம்டாக் மில்லியனர்" என்ற படத்திற்கு இசை அமைத்ததற்காக உலகின் உயரிய விருதான "ஆஸ்கர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கோல்டன் குளோப் விருது, "பாப்டா விருது", "அகாடமி விருது" என இன்னும் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.


ரஹ்மான் இசை அமைப்பில் உருவான தமிழ் திரைப்பட பட்டியல்
1.ரோஜா - 1992
2.புதிய முகம் - 1993
3.உழவன் - 1993
4.கிழக்குச் சீமையிலே - 1993
5.ஜென்டில்மேன் - 1993
6.திருடா திருடா - 1993
7.கருத்தம்மா - 1994
8.பவித்ரா - 1994
9.காதலன் - 1994
10.டூயட் - 1994
11.மே மாதம் - 1994
12.வண்டிச்சோலை சின்னராசு - 1994
13.புதிய மன்னர்கள் - 1994
14.பம்பாய் - 1995
15.இந்திரா - 1995
16.முத்து - 1995
17.இந்தியன் - 1996
18.லவ்பேர்ட்ஸ் - 1996
19.மிஸ்டர் ரோமியோ - 1996
20.காதல் தேசம் - 1996
21.அந்திமந்தாரை - 1996
22.ரட்சகன் - 1997
23.இருவர் - 1997
24.மின்சாரக்கனவு - 1997
25.உயிரே - 1998


26.ஜீன்ஸ் - 1998
27.என் சுவாசக்காற்றே - 1999
28.முதல்வன் - 1999
29.படையப்பா - 1999
30.காதலர் தினம் - 1999
31.சங்கமம் - 1999
32.தாஜ்மஹால் - 1999
33.ஜோடி - 1999
34.அலை பாயுதே - 2000
35.ரிதம் - 2000
36.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - 2000
37.தெனாலி - 2000
38.ஸ்டார் - 2001
39.பார்த்தாலே பரவசம் - 2001
40.அல்லி அர்ஜுனா - 2002
41.கன்னத்தில் முத்தமிட்டால் - 2002
42.பாபா - 2002
43.காதல் வைரஸ் - 2002
44.எனக்கு 20 உனக்கு 18 - 2003
45.பாய்ஸ் - 2003
46.பரசுராம் - 2003
47.உதயா - 2004
48.நியூ - 2004
49.ஆய்த எழுத்து - 2004
50.கண்களால் கைது செய் - 2004


51.அன்பே ஆருயிரே - 2005
52.சில்லுனு ஒரு காதல் - 2006
53.வரலாறு - 2006
54.சிவாஜி - 2007
55.அழகிய தமிழ் மகன் - 2007
56.சக்கரகட்டி - 2008
57.விண்ணைத் தாண்டி வருவாயா - 2010
58.ராவணன் - 2010
59.எந்திரன் - 2010
60.கடல் - 2012
61.மரியான் - 2013
62.கோச்சடையான் - 2014
63.காவியத்தலைவன் - 2014
64.லிங்கா - 2014
65.ஐ - 2015
66.ஓ காதல் கண்மணி - 2015
67.24 - 2016
68.அச்சம் என்பது மடமையடா - 2016
69.காற்று வெளியிடை - 2017
70.மெர்சல் - 2017
71.செக்கச் சிவந்த வானம் - 2018
72.சர்கார் - 2018
73.2.0 - 2018
74.சர்வம் தாளமயம் - 2019
75.பிகில்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாடலாசிரியர் காமகோடியன் மறைவுபாடலாசிரியர் காமகோடியன் மறைவு சசி படத்தின் டீசர் மூலம் கவுதம் மேனனுக்கு கிடைத்த கதாநாயகி சசி படத்தின் டீசர் மூலம் கவுதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

magan - london,யுனைடெட் கிங்டம்
06 ஜன, 2022 - 16:34 Report Abuse
magan This why you have to be very careful when you discuss any problems with murkans the only advise they give convert to their religion
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in