நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

தற்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்கிற படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த சித்தி இத்னானி என்பவர் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தெலுங்கில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் கவுதம் மேனன் படம் மூலமாக தான் இவர் தமிழுக்கு அறிமுகமாகிறார் என சொல்லப்பட்டது.
ஆனால் இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே அவர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து முடித்து விட்டார். தனது படத்தின் டீசரை கவுதம் மேனன் பார்க்க விரும்பியதால் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் சசி. அதில் கதாநாயகியாக நடித்திருந்த சித்தி இத்னானியை பார்த்ததும் இவர்தான் தனது படத்தின் நாயகி என முடிவு செய்தாராம் கவுதம் மேனன். தங்களது படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதால் தாரளாமாக உங்கள் படத்தில் அவரை பயன்படுத்தி கொள்ளுங்கள்.. எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை என சசியும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டாராம்.




