நடிகர் ரஜினிகாந்திற்கு அவர் ரசிகர்கள் ஆண்டுதோறும் நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பார்கள். அதேபோல் இந்த ஆண்டும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க கூடியிருந்தார்கள். இப்படி ரசிகர்கள் தனது வீட்டின் முன்பு கூடி இருப்பதை அறிந்த ரஜினிகாந்த் இன்று காலை தனது வீட்டின் வாசலில் வெளியே வந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதேபோல் அங்கு கூடி நின்ற அவரது ரசிகர்களும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்கள். அதுகுறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் சமூகவலைதளத்திலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி.