மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் |
மாறன், திருச்சிற்றம்பலம் படங்களை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் தான் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழ், தெலுங்கில் வெங்கி அட்லுரி இயக்கும் வாத்தி படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜிவி. பிரகாஷ் குமார் இசை யமைக்கிறார். மூன்று மாதங்களில் வாத்தி படத்தை முடித்து விட்டு அதன்பிறகு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்துள்ளார் தனுஷ். இப்படி தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகே தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே ஒருவன் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.