இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
முக்தா ராமசாமி, முக்தா சீனிவாசன் சகோதரர்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமைகள், சேலம் மார்டன் பிலிம்சில் தொடங்கிய இவர்களது பயணம் தமிழ் சினிமாவின் தரமான படங்களை தந்தது. முக்தா ராமசாமி தயாரிப்பாளராகவும், முக்தா சீனிவாசன் இயக்குனராகவும் வலம் வந்தார்கள். இப்போது முக்தா பிலிம்சை இவர்களது வாரிசுகள் நடத்துகிறார்கள்.
முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் 60வது ஆண்டை முன்னிட்டு முக்தா பிலிம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சரோஜாதேவி இல்லாவிட்டால் முக்தா பிலிம்ஸ் இல்லை என்று நன்றியோடு குறிப்பிட்டிருக்கிறது. அந்த செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
முக்தா பிலிம்ஸ் தொடங்கப்பட்டவுடன் அர்தாங்கி எனும் ஹிந்தி பட உரிமை வாங்கி எடுக்க ஆசைப்பட்டது. மீனாகுமாரி மற்றும் ஆகா நடித்த படம் அது. அந்த படம் தான் பனித்திரை என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. பெண்களுக்கு எதிராக அக்காலத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை களையெடுக்கும் மிக அற்புதமான கருவை கொண்டது பனித்திரை திரைப்படம்.
இப்படத்தின் கதாபாத்திரப்படி ஒரு பெண் என்பவள் ராசியற்றவள், அவளால் நஷ்டங்களே சேரும் என்றுரைத்து பெண்ணடிமை கூறி அவர்களை குடும்பத்திலும், சமூகத்திலும் புறந்தள்ளி ஒதுக்கி வைக்கும் சூழலில், ஒருவர் அவளை திருமணம் செய்துகொண்டு அவளால் நன்மை உண்டு, வீட்டின் மஹாலக்ஷ்மி அவள் என்று உணர்த்தி பெண்மையின் மேன்மையினை கூறும் அதே நேரத்தில், மூடநம்பிக்கைக்கு சவுக்கடி கொடுத்திட்ட அற்புதமான காவியம் பனித்திரை.
முதலில் இப்படத்திற்கு நாகேஸ்வரராவ் மற்றும் சரோஜாதேவி இருவரும் நடிப்பதாக ஒப்பந்தமாகி பூஜை போட்டு படம் தொடங்கியது. நாகேஸ்வரராவ் தெலுங்கில் நடித்த தேவதாஸ் உள்ளிட்ட படங்கள் அங்கே பெரும் வெற்றியினை ஈட்டி கொண்டாடி வரும் சமயத்தில் தமிழில் நடிக்க தயங்கி வாங்கிய அட்வான்சை திரும்பிக் கொடுத்து படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
தமிழ் நடிகர்கள் யாரும் இப்படத்தில் நாயகன் வேடம் ஏற்க முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது முக்தா பிலிம்ஸ் அப்போது ஒரு புது நிறுவனம் என்பதோடு படத்தில் நாயகனை விட நாயகிக்கே அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால் சரோஜாதேவி எங்கள் மீதும் இந்த படத்தின் கதை கரு மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டார்.
கதாநாயகனாக யாரும் நடிக்க முன்வராத நிலையில் ஜெமினி கணேசனிடம் சரோஜாதேவி நேரில் சென்று இப்படம் குறித்து விளக்கியும் அதன் சாதக அம்சங்களை கூறியும் நடிக்க ஒப்புக்கொள்ள செய்தார். சரோஜாதேவியின் இவ்வாறான சிறந்த நல்ல முயற்சியால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி 1961 டிசம்பரில் ரிலீஸ் ஆனது.
இப்படத்தின் 60 ஆண்டு கால பயணத்தின் வாயிலாக சிறப்பாக கொண்டாடும் இவ்வேளையில் நாங்கள் கூறிக்கொள்ள விரும்பும் ஒன்று நாங்கள் என்றென்றும் சரோஜாதேவி அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களால் தான் இப்படம் வெளிவந்து மக்களின் ஆதரவும் முக்தாவிற்கு கிடைத்தது என்பது சத்தியமான ஒன்றாகும்.
60 ஆண்டுகள் கடந்திட்ட எங்கள் முக்தா பிலிம்ஸ் அன்றுமுதல் இன்றுவரை மக்களின் கலை சார்ந்த சேவைக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இன்றைய காலத்திலும் எங்கள் நிறுவனம் வாயிலாக திரைப்படங்களினை இயக்கியும் தயாரித்தும் வழங்கி வருகிறோம். இப்போது வேதாந்த தேசிகர் தெலுங்கு மொழி திரைப்படம் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.