பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்னையால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தயாராகிறது. சுராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்நிலையில் பாடல் பதிவு தொடர்பாக வடிவேலு, சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர். அந்த வேலைகள் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் வடிவேலுவிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் சுராஜிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது.
இதனால் படம் திட்டமிட்டு தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் படப்பிடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. படப்பிடிப்பு துவங்க இன்னும் மூன்று வாரம் இருப்பதால் அதற்குள் இருவரும் சரியாகி வந்துவிடுவர். அதனால் வரும் 18ம் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.