டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதோடு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விஜயகாந்தின் வீட்டிலேயே படமாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த செய்தியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மறுத்திருக்கிறார் .
அவர் கூறுகையில், விஜயகாந்த் எந்த திரைப்படத்திலும் எடுக்கவில்லை. அவர் நடிப்பதாக வெளிவந்த தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்போதைக்கு கட்சி பணியில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஒருவேளை எதிர்காலத்தில் அவர் நடிப்பதாக இருந்தால் அதுகுறித்த செய்தியை அதிகாரபூர்வமாக வெளியிடுவோம் என்றார்.




