ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையுடன் நுழைந்து பின்னர் வெற்றிகரமான இயக்குனராக பாதை மாறியவர் எஸ்ஜே சூர்யா. எப்படியோ தனது இலக்கான நடிப்புலகிற்கு மீண்டும் திரும்பிய எஸ்ஜே சூர்யா தனது எண்ணப்படியே இறைவி, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாவும் நடித்தார். ஸ்பைடர், மாநாடு படங்களில் வில்லனாகவும் நடித்தார்.
இதில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் அவரது வில்லன் நடிப்பு ஹீரோவையே மிஞ்சும் விதமாக இருந்ததுடன் ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் அள்ளினார். இதைதொடர்ந்து அவர் நடிப்பை வெளிப்படுத்தும் விதமான, ரசிகர்களின் வரவேற்பை பெரும் விதாமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாகத்தான் ஆதிக் ரவிவிச்சந்திரன் இயக்கும் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் எஸ்ஜே.சூர்யா. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். இதுபற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.